இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த வம்சம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் அருள்நிதி. தொடர்ந்து மௌனகுரு, டிமான்டி காலனி,  ஆறாது சினம், K-13 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

கடைசியாக நடிகர் ஜீவாவுடன் இணைந்து நடிகர் அருள்நிதி களத்தில் சந்திப்போம் திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து ஹாரர் திரில்லர் கிரைம் திரில்லர் என த்ரில்லர் ரக திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் அருள்நிதியின் அடுத்தடுத்த திரைப்படங்களின் அறிவிப்புகள் ரசிகர்களின் கவனத்தை தற்போது ஈர்த்துள்ளது.

அடுத்ததாக அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் டைரி திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக தேஜாவு என்னும் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி எதிர்பார்ப்புகளை தூண்டியது.

அந்த வகையில் தற்போது மேலும் ஒரு புதிய த்ரில்லர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. பிரபல தமிழ் யூடியூப் சேனலான  எரும சாணி யூடியூப் சேனலின் விஜய்குமார் ராஜேந்திரன்  இயக்கும் புதிய திரைப்படமான அருள்நிதி 15 திரைப்படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.

விஜயகுமார் ராஜேந்திரன் எழுதி இயக்கும் இப்படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் ரான் எத்தன் யோஹன் இசையமைக்கிறார். MNM ஃபிலிம்ஸ் சார்பில் அரவிந்த் சிங் தயாரித்திருக்கும் இத்திரைப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் அனைத்து உரிமைகளையும் பெற்று வழங்குகிறது. ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த டி ப்ளாக் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ...