பிரபல யூடியூப் சேனலான எருமை சாணியில் நிறைய குறும்படங்கள் நடித்து டாப் ஹீரோயின் ரேஞ்சிற்கு ஒட்டுமித்த இளைஞர்களிடையே பெரும் பிரபலமானவர் ஹரிஜா. இதன் மூலம் அவருக்கு கிடைத்த பெரும் புகழை வைத்து படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்தது. 

கடந்த 2018-ம் ஆண்டு தான் கல்லூரி சீனியரும் காதலருமான அமர் ரமேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் திருவிளையாடல் என்ற புது யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் பல குறும்படங்களில் நடித்து வருகிறார்.

அப்படியிருந்தும் எரும சாணி யூடியூப்பில் அவர் கூறும் போடா எரும சாணி கிறுக்கு பயலே என்ற வசனம் இன்னும் இளைஞர்கள் மனதில் இருக்கிறது. துரு துறுன்னு குழந்தை போல பேசி ரசிக்க வைத்த ஹரிஜா இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஏராளம். போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகிறார். 

பார்ப்பதற்கு இவரே குழந்தை போல துருதுருவென்று இருப்பார். ஆனால் இவருக்கே இப்போது குழந்தை பிறக்க போகிறதாம். இவர் தற்போது கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஹரிஜா கடைசியாக Mr.லோக்கல் படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது எனும் படம் வைத்துள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Harija (@harijaofficial)