விஜய் தொலைக்காட்சியின் முன்னணி மெகா தொடர்களில் நடித்த அஸ்வின் குமார்,குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பிறகு மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் அடைந்தார். சமீபத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் ப்ரியா பவானி சங்கர் நடித்து வெளிவந்த ஓ மணப்பெண்ணே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அஸ்வின்குமார் நடித்திருந்தார்.

அடுத்ததாக ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் இயக்குனர் ஹரிஹரன் இயக்கியுள்ள என்ன சொல்லப் போகிறாய் படத்தில் அஸ்வின் குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். தேஜு ஸ்வினி மற்றும் அவந்திகா மிஸ்ரா கதாநாயகிகளாக நடிக்க, விஜய் டிவி புகழ், டெல்லி கணேஷ், சுப்பு பஞ்சு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரொமான்டிக் காமெடி திரைப்படமாக தயாராகியிருக்கும் என்ன சொல்ல போகிறாய் படத்திற்கு ரிச்சர்ட்.எம்.நாதன் விவேக் மற்றும் மேற்கு இசையமைத்துள்ளனர் முன்னதாக சொல்ல போகிறாய் படத்திலிருந்து டீசர் மற்றும் முதல் பாடலாக ஆசை பாடல் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் என்ன சொல்ல போகிறாய் படத்தின் 2-வது பாடலாக கியூட்  பொண்ணு பாடல் தற்போது வெளியானது. விவேக் மற்றும் மெர்வின் இசையில் தெருக்குரல் அறிவு வரிகளில் இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் பாடியுள்ள கியூட் பொண்ணு பாடலை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.