கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி பெரிய வெற்றியடைந்த தொடர் திருமணம்.இந்த தொடரில் இரண்டாவது நாயகனாக நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் தீபக் குமார்.தனது நடிப்பால் இந்த தொடரிலேயே பல ரசிகர்களை பெற்றிருந்தார் தீபக்.

இவர் அடுத்ததாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் என்றென்றும் புன்னகை தொடரில் ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார்.இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இவர் பிரபல சீரியல் நடிகையும்,தொகுப்பாளினியுமான அபிநவ்யாவை காதலித்து வந்தார்.

பிரபல செய்தி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பணியை தொடங்கி,சன் டிவியின் பிரியமானவன் மற்றும் விஜய் டிவியின் சிவா மனசுல சக்தி தொடர்களில் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் அபிநவ்யா.இவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சித்திரம் பேசுதடி தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் காதலித்து வந்தது பலரும் அறிந்ததே.தற்போது இவர்களது நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.இவர்களுக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.