தமிழின் முன்னணி சேனல்களில் ஒன்றாக ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றுள்ளது ஜீ தமிழ் தொலைக்காட்சி.இந்த தொலைக்காட்சியில் தொகுப்பாளியினாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தவர் சசிகலா நாகராஜன்.

சில சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர் சீரியல்களில் என்ட்ரி கொடுத்தார்.சன் டிவியில் ஒளிபரப்பான குலதெய்வம் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தினார் சசிகலா.அடுத்ததாக ஜீ தமிழில் ஒளிபரப்பான மிகப்பெரிய ஹிட் அடித்த யாரடி நீ மோஹினி தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார்.

ஜீ தமிழை தவிர கலைஞர் டிவி,கேப்டன் டிவி உள்ளிட்ட தொலைக்காட்சிகளிலும் தொகுப்பாளினியாக பணியாற்றி அசத்தியுள்ளார் சசிகலா.ஜீ தமிழில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் முக்கிய தொடர் என்றென்றும் புன்னகை.இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார் சசிகலா.இவருக்கு பிரபாகரன் என்பவருடன் திருமணம் நடந்து முடிந்திருந்தது.

இவர் கர்பமாக இருப்பதை சில மாதங்களுக்கு முன் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.கர்பமாக இருபத்தோடும் சீரியல்களில் தொடர்ந்து வந்த சசிகலா தற்போது டெலிவரி காலம் நெருங்கி விட்டதால் சில வாரங்கள் சீரியல்களில் இருந்து பிரேக் எடுப்பதாக அறிவித்துள்ளார்.

endrendrum punnagai serial actress vj sasikala nagarajan takes break for delivery