வைரலாகும் ஈஸ்வரன் படத்தின் டைட்டில் பாடல் வீடியோ !
By Aravind Selvam | Galatta | February 04, 2021 22:24 PM IST

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு பிறகு STR , ஹன்சிகா நடிக்கும் மகா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து பத்துதல படத்திலும்,வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு,கெளதம் மேனோனுடன் ஒரு படம்,தயாரிப்பாளர் சங்கத்திற்காக ஒரு படம் என்று செம பிஸியாக நடித்து வருகிறார்.
STR என்ன செய்தாலும் அவரை பற்றி என்ன செய்தி வந்தாலும் அது வைரலாகி விடும்.சமீபத்தில் இவரது சமையல்,ஜாகிங் வீடியோக்கள் வைரலாகி வந்தன.கெளதம் மேனன் இயக்கிய குறும்படத்திலும் வீட்டிலிருந்தே நடித்து கொடுத்திருந்தார்.
மாநாடு படத்திற்கு முன் STR பாண்டியநாடு,ஜீவா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய சுசீந்திரன் இயக்கத்தில் தயாராகியுள்ள ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார்.மாதவ் மீடியா ஒர்க்ஸ் மற்றும் D கம்பெனி இணைந்து தயாரிக்கின்றனர்.நிதி அகர்வால் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த லாக்டவுன் நேரத்தில் சிம்பு உடலெடையை குறைத்து செம ட்ரான்ஸபார்மேஷன் ஆகியுள்ளார் என்று பலரும் தெரிவித்து வந்தனர்.ஈஸ்வரன் படத்தின் பர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியாகி அவர் செம ஸ்மார்ட்டாக ஸ்லிம்மாக மாறியுள்ளதை ரசிகர்கள் பார்த்து கொண்டாடி வந்தனர்.இந்த படத்தின் வேலைகள் அனைத்தையும் விறுவிறுவென முடித்து கொடுத்தார் சிம்பு.
சிம்புவின் ட்ரான்ஸபார்மேஷனை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.இந்த படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 14ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் இந்த படத்தின் டைட்டில் பாடல் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.
Cooku with Comali's Pavithra Lakshmi in Bigg Boss Kavin's new project
04/02/2021 09:19 PM
Jiiva - Arulnithi's Kalathil Sandhippom gets a wide and massive release!
04/02/2021 07:29 PM