தென்னிந்திய நடிகைகளில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைளில் ஒருவர் ஈஷா ரெப்பா. 2012-ம் ஆண்டு லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தவர், 2016-ம் ஆண்டு வெளியான ஓய் என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார். தெலுங்கில் பிஸியாக இருக்கும் ஈஷா ரெப்பா, கடந்த ஆண்டு தமிழில் ஜி.வி.பிரகாஷுக்கு நாயகியாக ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடித்துள்ளார். எழில் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் கொரோனா லாக்டவுன் காரணமாக தள்ளிப்போனது. 

கொரோனா லாக்டவுன் காரணமா சினிமா தொழில் முற்றிலும் முடங்கி போய் கிடக்கிறது. தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் நடிகர், நடிகைகளின் ஒரே பொழுதுபோக்காக மாறி இருக்கிறது சமூக வலைதளங்கள். அவர்கள் அதில் தங்கள் கருத்துக்களையும் புகைப்படங்களையும் பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கிடையே நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களின் சமூக வலைத்தளக் கணக்குகளை குறிவைத்து சிலர் முடக்கி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை இஷா ரெப்பாவின் ட்விட்டர் கணக்கு இப்போது ஹேக் செய்யப்பட்டுள்ளது. ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் இஷாவின் கணக்கை யாரோ சிலர் முடக்கி வைத்துள்ளனர். அவர் கணக்கை மர்ம நபர்கள் பிளாக் செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

லாக்டவுனில் பல நடிகர், நடிகைகளின் பேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன், நடிகைகள் அனுபமா பரமேஸ்வரன், ஷோபனா, ஊர்வசி ரவ்தெலா உள்பட பல நடிகைகளின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டன. இதுபற்றி அப்போது அவர்கள் தெரிவித்து இருந்தனர். பின்னர் டெக்னிக்கல் குழுவால் அந்த கணக்குகள் மீட்கப்பட்டதாக அவர்கள் அறிவித்திருந்தனர்.

இயல்பு நிலை திரும்பியவுடன் கன்னட திரையுலகிலும் கால் பதிக்கவுள்ளார் ஈஷா. அதன் பிறகு தெலுங்கில் மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலர் என்ற படத்திலும் நடிக்கவுள்ளார். இவரது ட்விட்டர் அக்கௌன்ட் மீண்டும் வந்தால் நன்றாக இருக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர் இவரது ரசிகர்கள். சமூக வலைத்தளங்களில் ஈஷா வெளியிடும் புகைப்படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு.