தற்போதைய இளைஞர்களின் மனம் கவர்ந்த இன்ஸ்டாகிராம் நாயகிகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் பிரபல சீரியல் நடிகை நிவிஷா.சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் தொடரின் மூலம் சீரியலில் அறிமுகமான இவர் தொடர்ந்து விஜய் டிவி,ராஜ் டிவி,கலர்ஸ் தமிழ்,கலைஞர் டிவி உள்ளிட்ட முன்னணி சேனல்களில் சீரியல்களில் நடித்து அசத்தினார்.

தொடர்ந்து சூப்பர்ஹிட் சீரியல்களில் நடித்து வந்த நிவிஷா,தனக்கென தனியொரு ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார்.ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும்,விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே தொடர்களின் மூலம் மிகவும் பிரபலமானவராக மாறினார் நிவிஷா.குறிப்பாக ஈரமான ரோஜாவே தொடரில் நெகட்டிவ் ரோலில் நடித்த இவர் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

சில காரணங்களால் அந்த தொடரில் இருந்து வெளியேறிய நிவிஷா கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர்ஹிட் தொடரான ஓவியா தொடரில் நடித்திருந்தார்.சீரியல்களை தவிர சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் அசத்தியிருந்தார் நிவிஷா.

ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் மிகவும் பிரபலமாக இருந்த இவர் , லாக்டவுன் நேரத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் மேலும் வைரல் பிரபலமாக மாறினார்.இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் ஏதேனும் ஒரு புகைப்படத்தையோ,வீடீயோவையோ பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்.தற்போது ஒரு பாடலுக்கு நடனமாடி புதிய வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் நிவிஷா.இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nivisha K (@nivisha_official)