சின்னத்திரையில் பிரபலமான முகமாக அசத்தி வருபவர் அர்ச்சனா குமார்.நடனத்தின் மீது பெரிதும் ஆர்வம் கொண்ட இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார் இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார் அர்ச்சனா.

இதனை தொடர்ந்து விஜய் டிவியின் பொன்மகள் வந்தால் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து சீரியலில் என்ட்ரி கொடுத்தார்.பின்னர் விஜய் டிவியின் பெரிய ஹிட் தொடர்களில் ஒன்றான ஈரமான ரோஜாவே தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார்.

இந்த தொடரில் இவரது நடிப்பினை பார்த்து இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது.இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி ராஜா கலக்கல் ராணி மற்றும் சில சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் பங்கேற்று அசத்தினார்.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

தற்போது சின்னத்திரையில் இருந்து இவர் வெள்ளித்திரைக்கு என்ட்ரி தருவதாக அறிவித்துள்ளார்.பாபி சிம்ஹா ஹீரோவாக நடிக்கும் தடை உடை படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.