விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ்,ஆண்டாள் அழகர் உள்ளிட்ட தொடர்களில் நடித்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தவர் அணு.இந்த தொடர்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை அணு ஈர்த்திருந்தார்.இதனை தொடர்ந்து ஜீ தமிழின் சூப்பர்ஹிட் தொடரான மெல்ல திறந்தது கதவு தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார் அணு.

இந்த தொடரின் நடித்ததன் மூலம் தமிழ் மக்களுக்கு மிகவும் பரிட்சயமான ஒருவராக மாறினார் அணு.ஜீ தமிழில் ஒளிபரப்பான Mr and Mrs Khiladi நிகழ்ச்சியிலும் பங்கேற்று வந்தார் அணு.இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் முதல் தொடரில் நடித்து அசத்தியிருந்தார்.சன் டிவி,கலர்ஸ் தமிழ் என்று கிட்டத்தட்ட அனைத்து முன்னணி சேனல்களிலும் நடித்து அசத்திவிட்டார் அணு.

இவர் விக்னேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.கடைசியாக தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்றான ஈரமான ரோஜாவே தொடரில் நடித்துள்ளார்.இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த இவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.சில நாட்களுக்கு முன் இவரது கதாபாத்திரம் கொல்லப்பட்டது போல முடிக்கப்பட்டது.

இவர் தொடர்ந்து விஜய் டிவியில் ஏதேனும் சீரியலில் நடிப்பாரா என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.தற்போது சன் டிவியில் வரும் ஒரு சீரியல் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அணு.இவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

A post shared by Telly NXT (@tellynxt)