ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில், ரசிகர்களின் உற்சாகத்திற்கு மத்தியில் வெளியான படம் பிகில். கால்பந்து விளையாட்டு தான் கடவுள் என்று வாழும் பிகில் ஆகிய மைக்கேல், தந்தை மற்றும் நண்பனின் கனவை நனவாக்க தேர்ந்தெடுக்கும் தேடல் தான் இந்த பிகில் படத்தின் கதைச்சுருக்கம். இதுதான் படத்தின் முதல் பாதி என்றும் கூறலாம்.

bigil

கோச் மைக்கேலாக கோட் அணிந்து அணியை வழிநடத்தும் காட்சிகளாகட்டும், துடிப்பான கால்பந்து ஆட்டக்காரர் பிகில் ஆகட்டும் தனது கேரக்டரில் பிரமாதம் காட்டியுள்ளார் தளபதி விஜய். இருந்தாலும் ரசிகர்களின் மனதை, தந்தை ராயப்பன் தனது பாத்திரத்தால் சூறையாடி செல்கிறார்.

ruben

editorruben

தற்போது இப்படத்தின் எடிட்டர் ரூபன், பிகில் படத்தில் பணிபுரிந்த இளம் உதவி இயக்குனர்களுக்கு தனது நன்றியை பதிவு செய்துள்ளார். தலைவர் 168 படத்திற்கும் ரூபன் தான் எடிட்டர் என்பது கூடுதல் தகவல்.