தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 64. இப்படத்தில், மாளவிகா மோகனன், ஸ்ரீமன், சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். கடந்த 3 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. தற்போது வட சென்னை பகுதியில் படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர் ஆக்‌ஷன் காட்சிக்காக, டெல்லி செல்ல இருக்கின்றனர் என்ற தகவல் தெரியவந்தது.

lokeshkanagaraj thalapathy64

இப்படத்தின் எடிட்டர் ஃபிலோமின் ராஜ் கலாட்டாவிற்கு அளித்த சிறப்பு பேட்டியில் தான் பணிபுரிந்த படங்கள் மற்றும் திரை அனுபவம் பற்றி பகிர்ந்து கொண்டார்.

philominraj

அவர் பேசுகையில், மாநகரம் படத்தில் எந்தெந்த ஷாட்ஸ் ஸ்லொ மோஷனில் இருக்க வேண்டும் என்பதை ஸ்கிரிப்ட்டில் எழுதிவிடுவோம். படத்தின் காதல், ஆக்ஷன் காட்சிகளை நான் சிறுது உணர்ந்தால் தான் ரசிகர்களை ஈர்க்க முடியும் என்று கூறினார். கைதி படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் பற்றி பகிர்ந்து கொண்டார். தளபதி 64 கதை எனக்கு தெரியும். முன்னரே லோகேஷ் கூறியிருந்தார். எப்படி தளபதியை காண்பிக்க போகிறார் என்பதில் தான் உள்ளது. லோகேஷ் ஸ்டைலில் நிச்சயம் இருக்கும்.