பொம்மை படம் குறித்து எடிட்டர் ஆண்டனி பதிவு !
By Sakthi Priyan | Galatta | March 10, 2020 16:31 PM IST
இயக்கம், நடிப்பு, இசை என சினிமா சார்ந்த செயல்களில் ஈடுபட்டு ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்தவர் எஸ்.ஜே.சூர்யா. இவரது நடிப்பில் கடைசியாக வெளியாகி வெற்றி பெற்ற படம் மான்ஸ்டர். இப்படத்தை தொடர்ந்து ராதாமோகன் இயக்கும் பொம்மை படத்தில் நடித்து வந்தார். இதில் முக்கிய பாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் சாந்தினி நடித்தனர்.
காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. கனல் கண்ணன் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்தார்.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றது. தற்போது இப்படத்தின் படத்தொகுப்பாளர் ஆண்டனி இப்படம் பற்றி பதிவு செய்துள்ளார். இறுதி கட்ட படத்தொகுப்பை பார்க்கையில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் பிரியா பவானி ஷங்கரின் நடிப்பு அற்புதமாக இருந்தது என பதிவு செய்துள்ளார்.