மலையாள திரை உலகின்  முன்னணி நடிகராக இருந்தாலும் இந்திய அளவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளமே அமைத்து இருப்பவர் நடிகர் துல்கர் சல்மான். தமிழில் இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளிவந்த வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான துல்கர் சல்மான் இயக்குனர் மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி படத்திற்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தார்.

கடைசியாக தமிழில் இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் எனும் சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக மலையாளத்தில் குரூப் மற்றும் சல்யூட் ஆகிய திரைப்படங்களும் தமிழில் முன்னணி நடன இயக்குனரான பிரிந்த அவர்களின் இயக்கத்தில் உருவாகும் ஹே சினாமிகா ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளன.

இந்நிலையில் தற்போது துல்கர் சல்மான் அடுத்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் அசத்தலான அறிவிப்பு வெளியானது. இந்திய திரையுலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் பால்கி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கிறார்.

துல்கர் சல்மானுடன் இணைந்து பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல், ஸ்ரேயா தன்வந்த்ரி மற்றும்  பூஜா பட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். த் திரைப்படமாக தயாராகும் இந்தப் புதிய திரைப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.