மலையாள சினிமாவின் முன்னணி இளம் நடிகரான துல்கர் சல்மான் தமிழில் இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான வாயை மூடி பேசவும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் தொடர்ந்து இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவான ஓ காதல் கண்மணி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

கடைசியாக தமிழில் இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் இதயத்தை கொள்ளையடித்த நடிகர் துல்கர் சல்மான் தொடர்ந்து மலையாளத்தில் குரூப் மற்றும் சல்யூட் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இந்திய சினிமாவின் முன்னணி நடன இயக்குனரான பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகும் ஹே சினாமிகா திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

அடுத்ததாக ராணுவ வீரராக நேரடி தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார். லெப்டினனட் ராம் என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள புதிய தெலுங்கு திரைப்படத்தில் லெப்டினன்ட் ராம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். வைஜெய்ந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் இந்த புதிய திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் ஹனு ரகவாபுடி எழுதி இயக்குகிறார். ஒளிப்பதிவாளர் P.S.வினோத் ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

இந்திய எல்லையில் இருக்கும் ஒரு ராணுவ வீரனின் காதல் கதையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படத்தின் அழகான ப்ரோமோ துல்கர் சல்மானின் பிறந்தநாளான இன்று அவரது பிறந்த நாள் பரிசாக தற்போது வெளியாகியுள்ளது. இந்த அழகான ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.