மலையாளம் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் துல்கர் சல்மான்.மலையாளம் சினிமா மட்டுமின்றி தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் ஜொலித்து தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக தொடர் வெற்றிகளால் அவதரித்தார் துல்கர் சல்மான்.

இவர் நடிப்பில் சமீபத்தில் சீதா ராமம் படம் திரையரங்குகளில் வெளியாகி செம ஹிட் அடித்தது.இதனை அடுத்து சில முக்கிய படங்களில் நடித்து வருகிறார் துல்கர் சல்மான்.தற்போது இவர் கடந்த சில வருடங்களில் நடித்து வந்த படங்களை வைத்து ஒரு சுவாரசிய ட்ரெண்ட் வெளிப்பட்டுள்ளது.

கடந்த சில வருடங்களாக Pan இந்தியன் படங்கள் அதிகரிக்க பலரும் இந்த பாணியை பின்பற்றி பன்மொழிகளில் ரிலீஸ் செய்து வந்தனர் அதில் சில படங்கள் மட்டுமே வெற்றியடைந்தன.அந்த ட்ரெண்ட்டை பெரிதாக பின்பற்றாமல் கடந்த சில வருடங்களில் வெவ்வேறு மொழிகளில் நடித்து ஹிட் கொடுத்துள்ள நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார் துல்கர் சல்மான்.தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி மொழிகளில் நேரடி படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார் துல்கர் சல்மான்.

2020-ல் ரிலீசான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் துல்கர் சல்மானுக்கு மிக பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக அமைந்தது.தமிழ் படமாக உருவான இந்த படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

மலையாளத்தில் ஏற்கனவே பல ஹிட் படங்கள் கொடுத்துவிட்ட இவர் 2021-ல் குரூப் என்ற நேரடி மலையாள படத்தில் நடித்தார் , இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது,இந்த படம் தமிழ்,தெலுங்கு என பல மொழிகளில் டப் செய்யப்பட்டாலும் மலையாளம் தான் இந்த படத்தின் முதன்மையான மொழி.

ஆகஸ்ட் 5 2022-ல் வெளியாகி சக்கைபோடு போட்ட ரொமான்டிக் திரைப்படம் சீதா ராமம்.தெலுங்கு மொழியில் முதன்மையாக உருவானது.இதனை அடுத்து தமிழ்,மலையாளம்,ஹிந்தி என சில மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 23 2022-ல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் படம் chup,ஹிந்தி மொழியை முதன்மையாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த படமும் வெற்றிப்படமாக அவதரித்துள்ளது.பலரும் Pan இந்தியன் படங்களை நோக்கி நகர துல்கர் ஒவ்வொரு மொழியிலும் தனக்கான ரசிகர்களை இந்த ஹிட் படங்கள் மூலம் அதிகரித்து வருகிறார்.