தென்னிந்திய திரையுலகில் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவி ஸ்ரீ பிரசாத். மகேஷ் பாபு நடித்து ஹிட்டான சரிலேறு நீக்கெவ்வரு படத்திற்கு இசையமைத்திருந்தார். தமிழில் கடைசியாக சியான் விக்ரம் நடித்த சாமி 2 திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இவரது இசையில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான திரைப்படம் சச்சின். தளபதி விஜய் மற்றும் ஜெனிலியா நடித்த இந்த படத்தை ஜான் மகேந்திரன் இயக்கினார். 

DSP Special Performance Of Kanmoodi Thirakumbothu For Vijay Birthday

இன்று தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருடன் உள்ள வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் பேசிய விஜய், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் எனக்கு பிடிக்கும். சச்சின் படத்தில் கண்மூடி திறக்கும் போது பாடல் மிகவும் ஃபேவரைட், அந்த ஒரு பாடலை அடிச்சுக்க இன்னும் எந்த பாடலும் எனக்கு அமையவில்லை என்று பேசியுள்ளார் தளபதி. 

DSP Special Performance Of Kanmoodi Thirakumbothu For Vijay Birthday DSP Special Performance Of Kanmoodi Thirakumbothu For Vijay Birthday

தற்போது கண்மூடி திறக்கும் போது பாடலை, தனது பேண்ட் குழுவுடன் பாடி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத். இதனால் சச்சின் படத்தின் இரண்டாம் பாகம் உருவானால் நன்றாக இருக்கும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். வழக்கமான ஆக்ஷன் மற்றும் மாஸ் ஏதும் இல்லாமல் சச்சின் படத்தில் ஜாலியான கல்லூரி மாணவனாக தோன்றிய விஜய்யை யாருக்குத்தான் பிடிக்காது.