எதிர்காலத்துக்கு ஏற்ற புதுமையான பாடத்திட்டங்கள் ! டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
By Aravind Selvam | Galatta | September 17, 2020 10:30 AM IST

தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்கான போட்டியைப் பொறுத்து பரிணமிக்கக்கூடியது உயர்கல்வி. இளைய தலைமுறையினருக்கு சிறப்பான கல்வியை வழங்க வேண்டியும், தொழில்நுட்பத்தினால் உந்தப்படும் பொருளாதாரத்திற்கு ஏற்பவும் பல்கலைக்கழகங்கள் அவை வழங்கும் படிப்புகளை நவீனப்படுத்துவதில் மும்முரம் காட்டி வருகின்றன. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவ, தொழில்நுட்பத்தில் பல புதுமைகளைப் படைத்திடும் விதமாக மாணவர்களைப் பயிற்றுவிக்க வேண்டியது கல்வி நிறுவனங்களின் கடமையாகிறது. பெயருக்காக மட்டும் பட்டப்படிப்பை வழங்காமல் மாணவர் அனைவரையும் வேலைக்கேற்ற திறமை மற்றும் கெட்டிக்காரத்தனம் உள்ளவராக மாற்ற வேண்டியது அவசியமாகிறது. பல பிரதேசங்களாக பிரிந்து கிடப்பது இந்தியாவுக்கு ஒருவிதத்தில் வலிமை சேர்ப்பதாக அமைந்தாலும் சில விஷயங்களில் அதனால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எனவே, படிப்பை முடித்து வெளிவரும் மாணவர் எவரும் எந்தப் பகுதிக்கு வேலைக்குச் சென்றாலும், செயல்முறை அறிவு, தொழில்நுட்ப அறிவு மற்றும் வாழ்க்கைக்கு வேண்டிய திறமைகளை கொண்டிருக்குமாறு அவர்களைத் தயார்படுத்த வேண்டியது கல்வி நிறுவனங்களின் கடமையாக இருக்கிறது.
உயர்கல்வியில் புதுமை
பலதரப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் மாணவர்களிடையே நிலவும் வேறுபாடுகளை ஈடுகட்ட, டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் புதுமையான படிப்புகளை உருவாக்கியுள்ளது. வெறும் தத்துவரீதியிலான கற்பித்தலை மாற்றி வித்தியாசமான அணுகுமுறையைக் கையாண்டு வருவது எங்கள் நிறுவனத்தின் சிறப்பாகும். வேலை செய்யும் இடங்களுக்கு ஏற்ப புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும், புதிய திறைமைகளை வெளிப்படுத்தவும் இளைய சமுதாயத்தினரை உருவாக்கும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம்.
ஒரே பாடத்திட்டம் என்ற வரையறைக்குள் நின்றுவிடாமல், பலதரப்பட்ட பாடங்களையும் ஒருங்கிணைத்து மாணவர்களுக்கு வழங்குவதால், எப்படிப்பட்ட சூழ்நிலையையும் எதிர்காலத்தில் மாணவர்களால் எதிர்கொள்ள முடியும். மருத்துவம், டென்டல், நர்சிங், பிசியோதெரப்பி, பார்மஸி, துணை நல அறிவியல், ஆர்கிடெக்சர், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், ஹியூமானிட்டீஸ் & சயின்சஸ், கலை, பொருளாதாரம், மேலாண்மை, கணினி பயன்பாடுகள், கல்வி, ஹோட்டல் மேனேஜ்மன்ட் மற்றும் சட்டம் உள்ளிட்ட 13 துறைகள் இங்கு இயங்குவதால், இங்கு பயிலும் மாணவர்களுக்கு பலதரப்பட்ட துறைகள் சார்ந்த கல்வியை வழங்க முடிகிறது.
தொழில்முனைவுக்கு ஆதரவு
புதுமையான யோசனைகளையும், மாணவர்களின் தொழில்முனைவு ஆர்வத்தை ஊக்கப்படுத்தவும் பல உன்னதமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வழங்கப்படும் இன்னோவேஷன், ஆண்ட்ரப்ரூனர்ஷிப் & வென்ச்சர் மேனேஜ்மென்ட் எனும் சிறப்பு எம்.பி.ஏ படிப்பு, மாணவர்களைச் சிறந்த தொழில்முனைவோர்களாக மாற்றிட உதவுகிறது. தங்களின் சொந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் வேலை செய்துகொண்டே, இம்மேலாண்மைப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு சிறப்பு புள்ளிகளும் வழங்கப்படுகின்றன. இதுமட்டுமல்லாது, அனைத்து துறைகளிலும் இதுபோன்ற தொழில்முனைவு சார்ந்த படிப்புகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை வழங்கும் MGR DST New Gen IEDC Grant எனுப்படும் நிதியுதவி, திறமையான மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. மாணவர்கள் தங்களின் வர்த்தகரீதியிலான யோசனைகளை, முன்மாதிரிகளாக வடிவமைத்திட இந்த உதவித் தொகை பயனுள்ளதாக அமைகிறது. மத்திய அரசின், கல்வித் துறையின் அடல் இன்னோவேஷன் தரவரிசையில், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் பட்டியலில், எங்கள் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டிலேயே ”சிறப்பு சுயாட்சி அந்தஸ்தை ” பெற்ற இரண்டில் ஒரு நிகர் நிலை பல்கலைக்கழகம் என்ற நிலையில் இருப்பது குறிப்பிடதக்கது. மற்றும் இந்தியாவிலேயே எங்கள் பல்கலைக்கழகம் ISO 21001:2018 என்ற தரச்சான்றிதழை பெற்ற முதல் பல்கலைக்கழகம் என்ற பெருமை உடையது.
படிப்புகள் மற்றும் பாடத்திட்டங்களோடு, தொழில் துறைத் தேவைகளையும் ஒருங்கிணைப்பது கல்வி நிறுவனங்களின் கடமையாக இருக்கிறது. இதை மனதில் கொண்டே, வேறுபட்ட பாடப்பிரிவுகளை ஒருங்கிணைத்தும், பலதரப்பட்ட படிப்புகளுக்கு மத்தியில் இணக்கத்தை உருவாக்கியும், தொழில் துறைகள் மற்றும் சமுதாயத்திற்கு ஏற்ற வகையில் புதுமையான, புரட்சிகரமிக்க பாடத்திட்டங்களை உருவாக்கியுள்ளோம். இதனால் 21-ஆம் நூற்றாண்டுக்குத் தேவையான புதுத் திறைமைகளை மாணவர்களால் வளர்த்துக்கொள்ள முடியும். தொழில்துறை வல்லுனர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், நிர்வாகிகள், பெற்றோர்கள் போன்ற பலரின் ஆலோசனையோடு பாடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக, சுவாரஸ்யமான பல இளநிலை, முதுநிலை, இன்டக்ரேட்டட் மற்றும் ஆராய்ச்சி பட்டப்படிப்புகளை வழங்கி, எதிர்காலத்துக்கு ஏற்ற தரமான உயர்கல்வியினை வழங்கி வருகிறது டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்.
உயர்கல்வி படிப்புகள்:
பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்
மருத்துவம்
கட்டிடக்கலை
பல் மருத்துவம்
கலை&வணிகவியல்
முடக்குநீக்கியியல்/ செவிலியியல்
மனிதநேய அறிவியல்
மருந்தகம்
துணை மருத்துவ அறிவியல்
சட்டம்
ஹோட்டல் மேலான்மை
கல்வியியல்
இத்துறை அனைத்திலும் இளநிலை, மற்றும் முனைவர் பட்டப்படிப்புகள் பயிலும் வண்ணம் அமைத்துள்ள பல்கலைக்கழகம் நமது டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்.
www.drmgrdu.ac.in
சேர்க்கைக்கு தொடர்புகொள்ள:
7401220777 / 21777
7823944325 / 44326
SHOCKING: Vettaikaran director Babu Sivan passes away!
17/09/2020 08:21 AM
OFFICIAL: Lokesh Kanagaraj's next with his favourite hero, Kamal Haasan!
16/09/2020 05:48 PM
Legendary director Singeetam Srinivasa Rao tested positive for Covid!
16/09/2020 05:00 PM
New emotional video song from Kajal Aggarwal's Paris Paris - watch video here
16/09/2020 04:09 PM