டாக்டர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு ! ப்ரோமோ இதோ
By Aravind Selvam | Galatta | July 13, 2020 19:30 PM IST

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.கடைசியாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான ஹீரோ படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் அயலான் படத்தில் நடித்துவருகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக தடைபட்டுள்ளது.
இதனை அடுத்து தனது நெருங்கிய நண்பரும் கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனருமான நெல்சன் இயக்கத்தில் தயாராகி வரும் டாக்டர் படத்தில் நடித்து வருகிறார்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தை சிவகார்த்திகேயனின் SK ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
யோகி பாபு,வினய்,டோனி,ஜாரா அர்ச்சனா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.தெலுங்கில் கடந்த வருடம் நானி நடித்த கேங் லீடர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான பிரியங்கா மோகன்.இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் மூலம் இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக தள்ளிப்போயுள்ளது.
டாக்டர் படத்தில் இருந்து சில புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.இந்த புகைபடங்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வந்தன.இந்த படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த படத்தின் முதல் பாடல் வரும் ஜூலை 16ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அனிருத் இசையில் உருவாகும் இந்த பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதியுள்ளார்.டிக்டாக் தடை குறித்து இந்த ஜாலியான பாடல் உருவாகவுள்ளது என்று தெரிகிறது.இந்த பாடலின் அறிவிப்பை தங்கள் ஸ்டைலில் ஒரு ப்ரோமோ வீடியோவுடன் வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.அத்துடன் பாடல் ப்ரோமோவையும் வெளியிட்டுள்ளனர்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Chellamma song promo | Doctor | Sivakarthikeyan | Anirudh
13/07/2020 07:08 PM
No not acting in Gautham Menon's film - Mankatha actor clarifies rumours
13/07/2020 06:53 PM
Shruti Haasan's next biggie | Official trailer
13/07/2020 05:55 PM
Amazing tribute by Bigg Boss Harish Kalyan for Sushant Singh Rajput
13/07/2020 03:39 PM