செல்லம்மா பாடல் படைத்த சூப்பர் சாதனை ! விவரம் இதோ
By Aravind Selvam | Galatta | September 30, 2020 17:15 PM IST

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.கடைசியாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான ஹீரோ படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் அயலான் படத்தில் நடித்துவருகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக தடைபட்டுள்ளது.
இதனை அடுத்து தனது நெருங்கிய நண்பரும் கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனருமான நெல்சன் இயக்கத்தில் தயாராகி வரும் டாக்டர் படத்தில் நடித்து வருகிறார்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தை சிவகார்த்திகேயனின் SK ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
யோகி பாபு,வினய்,டோனி,ஜாரா அர்ச்சனா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.தெலுங்கில் கடந்த வருடம் நானி நடித்த கேங் லீடர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான பிரியங்கா மோகன்.இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் மூலம் இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
டாக்டர் படத்தில் இருந்து சில புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.இந்த புகைபடங்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வந்தன.இந்த படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய செல்லம்மா என்ற பாடல் கடந்த ஜூலை 16ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.சமூகவலைத்தளங்களில் செம வைரல் ஆகி வருகிறது
ரௌடி பேபி,புட்ட பொம்மா உள்ளிட்ட பாடல்களின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடன இயக்குனர் ஜானி.இவர் இந்த பாடலுக்கு நடனமைக்கவுள்ளதாக நேற்று தெரிவித்தார்.ரிலீசானது முதல் இந்த பாடல் செம வைரலாகி வருகிறது.இந்த பாடலில் அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் போட்ட ஸ்டெப்பை பலரும் ட்ரை செய்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த பாடல் சமீபத்தில் அதிகம் லைக் செய்யப்பட்ட சிவகார்த்திகேயன் பாடலாக ஒரு சாதனையை நிகழ்த்தியது.இந்த படத்தின் இரண்டாவது பாடலான நெஞ்சமே பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது செல்லம்மா பாடல் யூடியூப்பில் 40 மில்லியன் பார்வையாளர்களை கடந்து அசத்தல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.இதனை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
Chellamma kolla happy maaplainga!😍
Topping the playlist everywhere🥳🥳#Chellamma40MillionViews
ICYMI: https://t.co/IJajxKV4xs#Doctor #Chellamma @Siva_Kartikeyan @Nelsondilpkumar @anirudhofficial @SKProdOffl #Vinay @priyankaamohan @iYogiBabu @KalaiArasu_ @KVijayKartik pic.twitter.com/lDZY8iRYwE— KJR Studios (@kjr_studios) September 30, 2020
BIG NEWS: Mani Ratnam officially reveals the first lyricist of Ponniyin Selvan!
30/09/2020 05:21 PM
Ka Pae Ranasingam TV spot promo | Aishwarya Rajesh | Vijay Sethupathi
30/09/2020 04:35 PM
Meena's latest PPE Outfit Pictures go viral on social media - check out!
30/09/2020 04:00 PM