சென்னையின் பிரபல மருத்துவரும் நடிகருமானவர் சேதுராமன்.சந்தானத்தின் நெருங்கிய நண்பரான இவர் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.இதனை தொடர்ந்து வாலிபராஜா,சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

Doctor Actor Zi Clinic Sethuraman Passes Away

இவரது ஜி கிளினிக் சென்னையில் மிகவும் பிரபலமான ஒன்று.பல திரை நட்சத்திரங்களும் இவரிடம் ஆலோசனை பெற்றுள்ளனர்.தற்போது சேதுராமன் குறித்த துயரமான செய்தி ஒன்று கிடைத்துள்ளது.

Doctor Actor Zi Clinic Sethuraman Passes Away

36 வயதான சேதுராமன் நேற்று இரவு 8 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற தகவல் தெரியவந்துள்ளது.இவரது இறப்பு கோலிவுட் பிரபலங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இவரது குடும்பத்தினருக்கு கலாட்டா சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Doctor Actor Zi Clinic Sethuraman Passes Away