நடிகையாக வேண்டும் என்ற கனவுடன் கல்லூரி நாட்களில் மாடல் ஆக அவதரித்தவர் திவ்யபிரியா சிவம்.பல போராட்டங்களை கடந்து 2019 மிஸ் ஐகானிக் கோயம்பத்தூர் டைட்டிலை வென்று அசத்தினார் திவ்யபிரியா.முதல் போட்டியிலேயே பட்டத்தை தட்டிதூக்கிய இவர் அடுத்ததாக மிஸ் தமிழ்நாடு,மிஸ் சௌத் இந்தியா உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று அசத்தினார்.

இவற்றை தொடர்ந்து பல விளம்பர படங்கள் மற்றும் போட்டோஷூட்கள் நடத்தி ரசிகர்களின் கவனம் ஈர்த்தார் திவ்யபிரியா.இதில் கிடைத்த வரவேற்புகளை தொடர்ந்து சீரியல்களில் நடிக்க தொடங்கினார் திவ்யபிரியா.பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜமன்னார் வகையறா என்ற தொடரில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.

நடிகையாகவும் நல்ல வரவேற்பை பெற்றார் திவ்யபிரியா.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.இவற்றை தவிர ஒரு படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார் திவ்யபிரியா.தற்போது இவர் நடிக்கும் புதிய சீரியல் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று நந்தா மற்றும் ஆஷா கௌடா நடித்து வரும் கோகுலத்தில் சீதை தொடரில் இணைந்துள்ளார் திவ்யபிரியா.ஷாலினி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ள இவரது எபிசோடுகள் ஒளிபரப்பை தொடங்கியுள்ளன,இவர் சீரியலில் இணைந்தது குறித்த ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.புது சீரியலில் இணைந்துள்ள இவருக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இவர் அடுத்து எடுக்கும் முயற்சிகள் வெற்றிப்படிகளாக மாற கலாட்டா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.