கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து மக்கள் அதிகமாக OTT போன்ற ஆன்லைன் தளங்களில் நிறைய நேரங்களை செலவிட்டு வருகின்றனர்.திரையரங்குகள் இல்லாததால் சிறிய படங்களை OTTயில் வெளியிட  தமிழ் சினிமாவும் தயாராகி வந்தது.0

OTT-யில் படங்கள் வெளியிடுவதை திரையரங்க உரிமையாளர்களும்,விநியோகஸ்தர்களும்,திரை பிரபலங்கள் சிலரும் எதிர்த்து வந்தனர்.திரையரங்குகள் இல்லாததால் OTTயில் படங்களை வெளியிட சில தயாரிப்பாளர்கள் ஆதரித்து வந்தனர்.

அமேசான் ப்ரைம் நிறுவனத்தில் கடந்த சில மாதங்களாக நேரடியா தமிழ் படங்களும்,வெப் சீரிஸ்களும் வெளியாகி வருகின்றன.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம்மில் அக்டோபர் 30 அன்று வெளியாகவிருந்தது ,ஆனால் சில தவிர்க்கமுடியாத காரணங்களால் இந்த படத்தின் தற்போது தள்ளிப்போயுள்ளது.

கிட்டத்தட்ட 8 மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருப்பதாலும்,மக்களுக்கு நேரடியாக வீட்டிலேயே அவர்கள் விரும்பும் வகையில் சில படங்களை ரிலீஸ் செய்யவும் பிரபலங்கள் திட்டமிட்டு வந்தனர்.அமேசானை அடுத்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் ஹிந்தியில் கடந்த சில மாதங்களாக படங்களை வெளியிட்டு வருகின்றனர்.அந்த வரிசையில் தற்போது தமிழில் இந்த ட்ரெண்டை தொண்டங்கியுள்ளனர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்.தமிழில் நேரடியாக வெளியாகும் வெப் சீரிஸ் மற்றும் படங்களின் லிஸ்டை தற்போது வெளியிட்டுள்ளனர்.இதில் முதலில் நயன்தாரா நடிப்பில் RJ பாலாஜி இயக்கத்தில் தயாராகியுள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் படம் மற்றும் வெப் சீரிஸ் குறித்த தகவல் இதோ

1 மூக்குத்தி அம்மன் - RJ பாலாஜி,நயன்தாரா

2 லைவ் டெலிகாஸ்ட் - காஜல் அகர்வால்,கயல் அனந்தி,வைபவ் இயக்கம் - வெங்கட் பிரபு

3 My Perfect Husband - சத்யராஜ்,சீதா,ரக்ஷன்,ஆஜீத்

4 ட்ரிபிள்ஸ் - ஜெய்,வாணி போஜன் தயாரிப்பு - கார்த்திக் சுப்புராஜ்

5 நவம்பர் ஸ்டோரி - தமன்னா