தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடித்து சிகரம் தொட்ட சில நடிகர்களில் ஒருவர் சூர்யா.இவர் கடைசியாக நடித்திருந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.கமலின் விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்து அசத்தினார் சூர்யா.

இதனை அடுத்து பாலாவின் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தின் ஷூட்டிங்கை விரைவில் தொடங்கவுள்ளார்.இவற்றை தவிர சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாராகும் சூர்யா 42 படத்தில் நடிக்கிறார்.UV கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ க்ரீன் இணைந்து இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளது.யோகி பாபு,ரெடின் கிங்ஸ்லி,கோவை சரளா,ஆனந்த்ராஜ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படம் பூஜையுடன் தொடங்கியது.இந்த படம் 10 மொழிகளில் தயாராகிறது என்றும் 3Dயில் இந்த படம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர்.

பாலிவுட் நடிகை திஷா படானி இந்த படத்தின் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது.தற்போது இந்த படத்தின் ஷூட்டிங்கை தொடங்கியுள்ளதாக திஷா படானி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.