பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்ற நடிகர் பிரபாஸ்.இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தியது.இதனை அடுத்து வெளியான சாஹோ,ராதே ஷியாம் படங்கள் சுமாரான வரவேற்பை பெற்றன.இவற்றை அடுத்து சலார்,ப்ராஜெக்ட் கே,ஆதிபுருஷ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ்.

Project K படத்தினை வைஜயந்தி மூவிஸ் தயாரிக்கின்றனர்,இந்த படத்தினை நாக் அஷ்வின் இயக்குகிறார்.இந்த படத்தில் தீபிகா படுகோனே ஹீரோயினாக நடிக்கிறார்.பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் அறிவிப்பு முதலே படம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.Sci-Fic படமாக இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த வருடம் தொடங்கியது அதன்பின் பெரிய அப்டேட் எதுவும் இல்லை இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இந்த படத்தில் தற்போது மேலும் ஒரு முன்னணி நடிகை இணைந்துள்ளார்.பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திஷா பட்டானி நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.பல நட்சத்திரங்கள் ஒரே படத்தில் இணைவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

disha patani joins the cast of prabhas project k movie deepika padukone nag ashwin