கடந்த 2007-ம் ஆண்டு தல அஜித் வைத்து கிரீடம் படத்தை இயக்கியவர் விஜய். அதைத்தொடர்ந்து பொய் சொல்ல போறோம், மதராசபட்டினம், தெய்வத் திருமகள், தாண்டவம், சைவம் போன்ற சீரான படைப்புகளை தந்தார். இறுதியாக பிரபுதேவா வைத்து தேவி 2 படத்தை இயக்கினார். 

Director Vijay Baby Son Cute Picture Shared On Social Media Director Vijay Baby Son Cute Picture Shared On Social Media

கடந்த வருடம் ஜூலை மாதம் இயக்குனர் விஜய்க்கும், மருத்துவர் ஐஸ்வர்யா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. சமீபத்தில் இந்த தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தனது பிறந்தநாளை செல்ல மகனுடன் கொண்டாடி வருகிறார் இயக்குனர் விஜய். மகனுடன் இருக்கும் விஜய்யின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Director Vijay Baby Son Cute Picture Shared On Social Media

விஜய் தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தலைவி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்க, அரவிந்த் சாமி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.