போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் இயக்குனர் விக்னேஷ் சிவன்.பின்னர் நானும் ரௌடி தான்,தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களின் மூலம் மக்களின் மனங்களில் இடம் பிடித்தார்.அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.

Vignesh Shivn Netflix

இது தவிர நயன்தாரா நடிக்கும் படத்தினை தயாரிக்கவுள்ளார்.மேலும் Netflix-க்காக ஒரு அந்தோலஜி படம் ஒன்றை எடுக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த படத்தினை விக்னேஷ் சிவன்,கெளதம் மேனன்,சுதா கொங்கரா,வெற்றிமாறன் உள்ளிட்டோர் இணைந்து இயக்கவுள்ளனர்.ஹிந்தியில் ஹிட் ஆன Lust Stories வெப் சீரிஸின் தழுவல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh Shivn Netflix

தற்போது இந்த படத்திற்காக விக்னேஷ் சிவன் இயக்கும் பகுதிகள் குறித்த தகவல் கிடைத்துள்ளது.விக்னேஷ் சிவன் இயக்கும் பகுதியின் ஷூட்டிங் இன்று தொடங்கியுள்ளது என்றும் இதில் அஞ்சலி ஹீரோயினாக நடித்து வருகிறார் என்றும் நெருங்கிய வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

Vignesh Shivn Netflix