“தேவையில்லாத கேள்வி இது..” AK 62 படம் குறித்த கேள்விக்கு விக்னேஷ் சிவன் பதில்.. முழு விவரம் இதோ..

AK62 குறித்த கேள்விக்கு விக்னேஷ் சிவன் பதில் வைரலாகும் பேச்சு இதோ -  Vignesh shivan about Ajith kumar AK62 | Galatta

சென்னை பெருநகர காவல்துறை ஒருங்கிணைத்த போதை பொருள் பழக்கம் எதிரான செயல்பாட்டில் குறும்படம் போட்டி நடத்தவுள்ளதாக அறிவிப்பு முன்னதாக வெளியானது. போதை பொருளுக்கு எதிரான இயக்கம் (Drive against Drugs) என்ற கருப்பொருளை கொண்டு குறும்பட போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் 11 வகுப்பு மாணவர் உட்பட பலர் குறும்படங்களுடன் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற குறும்பட குழுவினருக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் உயர் காவலதிகாரிகள் மற்றும் நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டனர்.  மேலும் இந்த குறும்படங்களை தேர்வு செய்யும் பொறுப்பில் விக்னேஷ் சிவன் குழு இயங்கி வந்தது. இப்போட்டியில் வெற்றி பெரும் குழுவிற்கு 'விக்கி பிளிக்ஸ்' நிறுவனத்தில் வாய்ப்பு வழங்கப்படும் என்று இந்த நிகழ்ச்சி தொடக்க விழாவில் அறிவித்திருந்தார்.  போட்டியில் வெற்றிபெற்ற போட்டியளார்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பேசிய விக்னேஷ் சிவன்

"நானும் ஒரு காவலதிகாரியாக வர வேண்டும் என்று நினைத்தேன்.‌ஆனால் என் ஆர்வம் வேறுபக்கம் திரும்பியது. இருந்தாலும் காவல்துறைக்கு என்னால் என்ன முடியுமோ அதை செய்ய நினைத்துள்ளேன். தனி நபர் ஒழுக்கத்தை நான் கடைபிடித்துள்ளேன். எல்லோரும் அதே போல் தனிமனித ஒழுக்கத்தை பாதுகாத்தால் நல்லது. போதைப்பொருள் பழக்கம் எதிரான விழிப்புணர்வு பற்றி பேசும் போது நிறைய யோசனைகள வந்தது. அதில் பல கலந்துரையாடலுக்கு பின் நாங்கள் கையிலெடுத்தது இந்த குறும்பட போட்டி. 300க்கும் மேற்பட்ட குறும்படங்கள் வந்தது. அதில் பெரும்பாலும் நல்ல படங்கள் தான். தேர்வு செய்ய சிரமமாக இருந்தது இன்று கமிஷ்னர் அவர்கள் முன்னாடி இந்த குறும்படங்கள் திரையிடவிருக்கிறது. எல்லா படங்களும் நல்லா பண்ணிருக்காங்க..” என்றார்.

மேலும் இதனையடுத்து  பத்திரிக்கையாளர்களை சந்தித்த விக்னேஷ் சிவன்

“போதைப்பொருள் பழக்கம் எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும்படங்கள் செய்யும் போது இளைஞர் மூலமா ஒரு மாற்றம் ஏற்படுகிறது. இதுதான் எங்கள் நோக்கம். நான் இதுவரைக்கும் என் படங்களில் போதை பொருள் பயன்படுத்துறா மாதிரி காட்சி வைக்கவில்லை. ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் பண்ணும்போது தனிக்கை குழு இதனை குறிப்பிட்டார்கள், எல்லா படத்திலும் சிகரெட், குடி என்று வரும் எச்சரிக்கை கார்டு இப்படத்தில் வராது. ‘நானும் ரௌடிதான்’ படம் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டது. அந்த படத்தில் குடிக்குறா மாதிரி எந்தவொரு காட்சியும் வராது. என்னால் முடிந்த அளவு என் படங்களும் என் ஹீரோவும் அதை செய்யாமல் பார்த்து கொள்கிறேன். குழந்தைகள் தான் அதிகம் படம் பார்க்கிறார்கள் அதை கருத்தில் கொண்டு அவர்களை பாதிக்காத அளவு படம் எடுத்தால் நல்லது‌” என்றார்.

மேலும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தில் படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இதுகுறித்து கேட்கையில் அவர்,"சம்மதம் இல்லாத கேள்வி இது” என்றார்.மேலும் அஜித் லைகா கூட்டணியில் அமைந்த படம் குறித்து கேட்கையில் “இப்போ தேவையில்லாத கேள்வி. இந்த நிகழ்ச்சி குறித்த கேள்வி எதனா இருந்தா சொல்லுங்க சொல்றேன்” என்றார் இயக்குனர்  விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் லைகா தயாரிப்பில் நடிகர் அஜித் குமார் இயக்கவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. ஒரு வருடம் கடந்தும் அப்படம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இடையில் அஜித் கே=விக்னேஷ் கூட்டணி உடைந்தது என்ற செய்தி வெளியானது. இந்த செய்திக்கு விளக்கமும் லைகா தரப்பிலும் விக்னேஷ் தரப்பிலும் இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடதக்கது.

“மஞ்சிமா மட்டும் இல்லனா நான் இங்க வந்திருக்க முடியாது” மனம் திறந்த கௌதம் கார்த்திக் – சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..
சினிமா

“மஞ்சிமா மட்டும் இல்லனா நான் இங்க வந்திருக்க முடியாது” மனம் திறந்த கௌதம் கார்த்திக் – சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..

அமீர், யுவன் கூட்டணியில் புதிய படம்.. உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரலாகும் அறிவிப்பு  இதோ..
சினிமா

அமீர், யுவன் கூட்டணியில் புதிய படம்.. உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரலாகும் அறிவிப்பு இதோ..

கனா, நெஞ்சுக்கு நீதி இயக்குனர் அருண்ராஜா காமராஜின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு -  அட்டகாசமான டைட்டில் இதோ..
சினிமா

கனா, நெஞ்சுக்கு நீதி இயக்குனர் அருண்ராஜா காமராஜின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு - அட்டகாசமான டைட்டில் இதோ..