இனி புது ரூட்.. ஹோட்டல் தொழிலதிபரான இயக்குனர் அமீர்.. திறப்பு விழாவில் பங்கேற்ற வெற்றிமாறன், சூரி.. – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..

சென்னையில் புது உணவகத்தை துவங்கிய இயக்குனர் அமீர் விவரம் உள்ளே - Director ameer starts coffee shop at Chennai esr | Galatta

தமிழ் சினிமாவில் மௌனம் பேசியதே திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அமீர். முதல் படத்திலே தமிழ் ரசிகர்களின் அபிப்ராயத்தை பெற்ற இவர் இரண்டாவது படத்தில் வித்யாசமான கதைகளத்தில் களமிறங்கிய திரைப்படம் ‘ராம்’. இரண்டு வெவ்வேறு கதைகளங்களில் திரைப்படங்களை கொடுத்து கவனம் ஈர்த்த இயக்குனர் அமீர். பின் எதிர்பாராத வகையில் மிரட்டலான கிராம பின்னணியில் காதல் திரைப்படமான பருத்தி வீரன் இயக்கி மிகப்பெரிய ஹிட் கொடுத்தார். இன்று பருத்தி வீரன் திரைப்படம் ரசிகர்களாலும் திரை பிரபலங்களினாலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. முன்னணி இயக்குனராக வலம் வந்த அமீர் பின் நடிகராகவும் திரை திரையில் கவனம் பெற்றார். அதன்படி வடசென்னை, யோகி ஆகிய திரைப்படங்கள் மூலம் ஒரு நடிகராக இயக்குனர் அமீர் கொண்டாடப் பட்டார். தற்போது இவர் ஜீ5 தளத்தில் நிலமெல்லாம் ரத்தம் என்ற இணைய தொடரில் இயக்குனராக பணியாற்றி வருகிறார். அதையடுத்து வெற்றிமாறன், தங்கம் இணைந்து எழுதும் ‘இறைவன் மிகப்பெரியவன்’ என்ற திரைப்படத்திலும் பணியாற்றி வருகிறார். இயக்குனராக இவரது திரைப்படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் இவரது ரசிகர்கள் இவரது அடுத்த திரைப்படங்களுக்கு ஆவலுடன் காத்திருகின்றனர்.

இந்நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உத்தண்டி சுங்கசாவடி மற்றும் மாயாஜால் சினிமாஸ் அருகே புதிய ரெஸ்டாரன்ட் ஒன்றை துவங்கியுள்ளார் இயக்குனர் அமீர்.  இந்த ஹோட்டலுக்கு ‘4am coffee & Kitchen’ என்று பெயரிட்டுள்ளார். அதிகாலையில் 4 மணிக்கு துவங்கும் ஹோட்டல் மதியம் 12 மணி வரை இருக்கும் பின் சிறிது நேரம் கழித்து மாலை 4 மணிக்கு தொடங்கும் ஹோட்டல் இரவு 12 வரை இயங்கவுள்ளது. இந்த ஹோட்டலில் வாடிக்கையாளர் படிப்பதற்கு நல்ல கருத்துகள் உள்ள புத்தகங்களும் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலை இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சூரி ஆகியோர் திறந்து வைத்தனர்.

 

Director #Vetrimaaran and Actor @sooriofficial inaugurated Director #Ameer 's new restaurant #4am Cafe & Kitchen at ECR near Uthandi toll plaza and Mayajaal

A perfect spot for all Coffee enthusiasts to chill with friends & family.@directorameer #JafferSadiq #RameshKrishnanpic.twitter.com/GkyzSQiQRQ

— Nikil Murukan (@onlynikil) June 3, 2023

இந்த ஹோட்டலுக்கு 4 am coffee & kitchen என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் திறப்பு விழாவில் வெற்றிமாறன் அவருடைய குடும்பத்தாருடன் வருகை தந்திருந்தார். அவரை தொடர்ந்து இயக்குனர் கரு.பழனியப்பன். நடிகை கன்னிகா சினேகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த திறப்பு விழாவில் பங்கேற்றனர். இயக்குனர் அமீரின் இந்த முயற்சிக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

“இவங்க இல்லன்னா இந்த 20 வருஷம் இல்லை..” மேடையில் உடைந்து அழுத சித்தார்த்.. – Exclusive Interview இதோ..
சினிமா

“இவங்க இல்லன்னா இந்த 20 வருஷம் இல்லை..” மேடையில் உடைந்து அழுத சித்தார்த்.. – Exclusive Interview இதோ..

நாட்டையே உலுக்கிய ஓடிசா ரயில் விபத்து.. 280 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..! - இரங்கல் தெரிவித்து வரும் திரையுலகினர்.. விவரம் உள்ளே..
சினிமா

நாட்டையே உலுக்கிய ஓடிசா ரயில் விபத்து.. 280 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..! - இரங்கல் தெரிவித்து வரும் திரையுலகினர்.. விவரம் உள்ளே..

உலக தரத்தில் உருவாகும் சியான் விக்ரமின் தங்கலான்.. அப்டேட் கொடுத்த இயக்குனர் பா ரஞ்சித் – விவரம் உள்ளே..
சினிமா

உலக தரத்தில் உருவாகும் சியான் விக்ரமின் தங்கலான்.. அப்டேட் கொடுத்த இயக்குனர் பா ரஞ்சித் – விவரம் உள்ளே..