“விடுதலை Director’s Cut ல் உள்ள வித்யாசம் இது தான்..“ வெற்றிமாறன், கௌதம் மேனன் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் – முழு நேர்காணல் இதோ..

விடுதலை பட directors cut க்கு காரணம் வெற்றிமாறன் பதில் இதோ - Director Vetrimaaran about zee 5 extended version of viduthalai | Galatta

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியாகி விமர்சனத்திலும் வசூலிலும் கொண்டாடப்பட்ட திரைப்படம் வெற்றிமாறனின் விடுதலை. அட்டகாசமான பீரியட் கிரைம் கதைகளத்தை கொண்டு உருவான இப்படத்தில் நடிகர் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கௌதம் மேனன், ராஜீவ் மேனன், இளவரசு, சேத்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த மார்ச் 31 ம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரசிகர்களிடம் ஆரவராமாக கொண்டாடப்பட்ட விடுதலை திரைப்படம் கடந்த ஏப்ரல் 28 ம் தேதி ஜீ 5 தளத்தில் திரையரங்குகளில் சேர்க்கப்படாத காட்சிகளுடன் சேர்ந்து  director’s cut என்ற பெயரில் வெளியானது, இதையடுத்து ரசிகர்கள் விடுதலை திரைப்படத்தை பார்த்து கொண்டாடி பேசி வருகின்றனர்.

இந்நிலையில் ஜீ 5 ல் வெளியான விடுதலை director’s cut படம் குறித்து இயக்குனர்கள் வெற்றிமாறன், கௌதம் மேனன், ராஜீவ் மேனன் ஆகியோர் நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு பகிர்ந்த சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்டனர் அதில் விடுதலை படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் அவர்களிடம் இணையத்தில் வெளியிடப்படும் நீக்கப்பட்ட காட்சிக்கும் இன்று ஜீ5 ல் வெளியாகிருக்கும் Director’s Cut க்கும் என்ன வித்யாசம்? என்ற கேள்விக்கு,

“உண்மையாகவே தெரியாது.. ஆனால் நான் இதை 'Director's Cut' என்று சொல்லாமல் 'Extended Version ' என்றே அழைக்க விரும்புகிறேன். திரையரங்கில் வெளியிட பொருத்தமில்லாத காட்சிகளின் தொகுப்பு இது. நமக்கு இருக்கும் குறிப்பிட்ட  நேரத்தில் அதுல எந்தெந்த காட்சிகள் சிலவை வேண்டாம் என்று எடுப்போம். ஆனால் அதிக தகவல்கள் படிநிலை கொண்ட படத்தில் சில காட்சிகள் முழுமையாக இருப்பது தான் இந்த extended version. அந்த மாதிரி எனக்கு எல்லா படத்திலும் இருந்துருக்கு.. வடசென்னை, ஆடுகளம் படத்திற்கு எனக்கு சொல்ல வேண்டியது நிறைய இருந்தது படமாகவும் எடுத்திருந்தேன். ஆனால் சேர்க்க முடியவில்லை. இந்த படம் பண்ணும் போது எங்களுக்கு சில வழிகள் இருந்தது. அதை Extended version ஆக கொண்டு வர முடியும் என்ற சாத்தியம் இருந்தது. அதனால் இதை முயற்சி செய்தோம்‌. " என்றார் இயக்குனர் வெற்றி மாறன்.

மேலும் தொடர்ந்து "சில சிறப்பு காட்சிகளை நான் விரும்பிய அப்படியே விட முடியாது என்று நான் நம்பினேன். எல்லா படமும் பண்ணும் போது சில காட்சிகள் ரொம்ப பிடித்திருக்கும். ஆனால் படம் பார்க்க அந்த நேர்கோட்டில் அது பொருந்தாமல் போகும் போது பிடிச்ச காட்சிகளை சேர்க்க முடியாமல் போகும். சில அர்த்தமுள்ள காட்சிகள் இல்லாமல் போகும். அந்த மாதிரி இந்த படத்தில் நிகழ்ந்த போது அதை நான் இதுபோன்ற Extended version ஆக சேர்க்க முடிந்தது." என்றார் இயக்குனர் வெற்றிமாறன்.  

மேலும் தொடர்ந்து இயக்குனரும் விடுதலை படத்தின் நடிகருமான கௌதம்  மேனன் அவர்கள் பேசுகையில்,  "இது பற்றி முன்பாகவே பேசியிருக்கிறார். இது ஒரு சுதந்திரமான விஷயமாகதான் நான் இந்த Extended version பார்க்கிறேன். ஒரு படம் திரையரங்கில் நிறைய கட்டுபாடுகளை கடந்து வருகிறது.  இந்த படத்தில் நிறைய காட்சிகள் உள்ளது.  நானும் அதை தான் பார்க்க ஆவலாக இருந்தேன்‌. Extended version என்னவாக இருக்கும் என்று. இதிலே நானும் ராஜீவ் மேனன் நடித்த காட்சிகள் அதிகம் சேர்க்கப்பட்டுள்ளது. நான் என்ன நினைக்கிறேன் என்றால் மக்கள் அதை புரிந்து கொண்டு பார்ப்பார்கள் என்று.. நாம் சில விஷயங்களை செய்கிறோம் அதை முழுமையாக மக்களிடம் கொண்டு போக முடியறது இல்ல..  அவங்க சென்சாருக்கு என்ன கொடுத்திருக்கோமோ அதை தான் OTT ம் எதிர்பார்க்கிறாங்க. இதை சமாளித்து வெற்றி கொண்டு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது." என்றார் கௌதம் வாசுதேவ் மேனன்.

மேலும் தொடர்ந்து இதே கேள்வி விடுதலை திரைப்படத்தின் நடிகரான இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள் இதுகுறித்து,

AK62 Update.. கொண்டாட்டத்திற்கு ரெடியா..! அஜித் பிறந்தநாளுக்கு அட்டகாசமான Treat.. - உற்சாகத்தில் ரசிகர்கள்.. விவரம் இதோ..
சினிமா

AK62 Update.. கொண்டாட்டத்திற்கு ரெடியா..! அஜித் பிறந்தநாளுக்கு அட்டகாசமான Treat.. - உற்சாகத்தில் ரசிகர்கள்.. விவரம் இதோ..

“அந்த பாடலில் இருப்பது பானையே இல்லை” உண்மையை உடைத்த தோட்டா தரணி – பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கிய அட்டகாசமான நேர்காணல் இதோ..
சினிமா

“அந்த பாடலில் இருப்பது பானையே இல்லை” உண்மையை உடைத்த தோட்டா தரணி – பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கிய அட்டகாசமான நேர்காணல் இதோ..

பொன்னியின் செல்வன் படத்தின் தங்க சுரங்கம் உருவான விதம் குறித்து தோட்டா தரணி  - சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..
சினிமா

பொன்னியின் செல்வன் படத்தின் தங்க சுரங்கம் உருவான விதம் குறித்து தோட்டா தரணி - சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..