தமிழ் சினிமாவில் ஜாலியான படைப்புகள் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு. 
தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அவர் இயக்கி வந்த மாநாடு படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இப்படியிருக்க வெங்கட் பிரபுவின் ட்விட்டர் பதிவுகள் வைரலாகி வருகிறது.

venkatprabhu

இந்நிலையில் இன்று உடன் பிறப்புகள் தினம் என்பதால் இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தல அஜித் மற்றும் தளபதி விஜய்யுடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, உடன்பிறப்புகள் தின வாழ்த்துகள். அன்பை பகிருங்கள் வெறுப்பை பகிராதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

mankatha

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, பாரதிராஜா, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.