தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகராக ரசிகர்கள் மனதில் தல என சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவர் நடிகர் அஜித்குமார். அடுத்ததாக தல அஜித் குமார் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் அடுத்த ஆண்டு 2022 ஜனவரியில் பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது வலிமை திரைப்படம்.

முன்னதாக நடிகர் அஜித்குமார் திரைப்பயணத்தில் 50-வது திரைப்படமாக வெளிவந்து மெகா ஹிட்டான திரைப்படம் மங்காத்தா. இயக்குனர் வெங்கட்பிரபு எழுதி இயக்கிய படத்தில் காவல்துறை அதிகாரியாக தல அஜித் மாஸ்ஸான கதாப்பாத்திரத்தில் மிரட்டினார்.யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் மங்காத்தா படத்தின் தீம் மியூசிக் அந்த காலகட்டத்தில் பலரது ரிங்டோனாக ஒலித்தது, இன்றும் ஒலிக்கிறது.

தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி அவர்களின் கிளவுட் நைன் மூவிஸ் நிறுவனம் தயாரித்த மங்காத்தா படத்தில் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வில்லனாக தல அஜித்குமார் மிரட்ட, மறுபுறம் ஆக்சன் கிங் அர்ஜுன் அதிரடி காட்டினார்.பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூல் செய்த மங்காத்தா திரைப்படத்தின் பார்ட்-2-விற்காக நீண்ட நாட்களாக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். 

இந்நிலையில் சமீபத்தில் நமது கலாட்டா சேனலுக்கு பிரத்தியேகமாக இயக்குனர் வெங்கட்பிரபு அளித்த பேட்டியில் மங்காத்தா-2 குறித்து பல ருசிகர தகவல்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக மங்காத்தா படத்தில் வினாயக் கதாபாத்திரத்தில் நடித்த அஜித்தின் கதாபாத்திரம் 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது எப்படி இருக்கும் என்ற கோணத்தில் அதற்குத் தகுந்தாற்போல் பல மாறுதல்கள் இருக்கும் என இயக்குனர் வெங்கட் பிரபு பதில் அளித்தது கட்டாயம் மங்காத்தா 2 தயாராகும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபுவின் பிரத்யேக பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.