தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பவர் இயக்குனர் லிங்குசாமி . பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக தனது பணியை தொடங்கிய இயக்குனர் வசந்தபாலன் ஆல்பம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து வெயில், அங்காடித்தெரு, அரவான், காவியத்தலைவன் என சிறந்த திரைப்படங்களை இயக்கியுள்ளார். 

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் வசந்தபாலன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த சமயத்தில் இயக்குனர் லிங்குசாமி இயக்குனர் வசந்தபாலனின் நிலை அறிந்து மருத்துவமனைக்கு  சென்றுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த வசந்தபாலன்-ஐ பார்க்க அனுமதிக்காத மருத்துவமனை நிர்வாகத்திடம்  மிகவும் போராடி மன்றாடி உள்ளே சென்று வசந்தபாலனை  சந்தித்திருக்கிறார். 

மேலும் இரவு பகல் பாராமல் மருத்துவமனைக்கு அவ்வப்போது சென்று வசந்தபாலன் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் அடிக்கடி விசாரித்து வசந்த பாலனுக்கு தேவையான மருத்துவ உதவிகளை  செய்து வசந்த பாலனுக்கு  அதிக நம்பிக்கையூட்டி இருக்கிறார். தீவிர சிகிச்சை பிரிவில் மோசமான உடல்நிலையில் இருந்த வசந்தபாலன் லிங்குசாமியின் இந்த பாசத்தால் மிகவும் நெகிழ்ந்து தற்போது நோய் தொற்றிலிருந்து முழுவதுமாக குணமாகி மீண்டு வந்ததும் இயக்குனர் லிங்குசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஃபேஸ்புக் பக்கத்தில்  இயக்குனர் லிங்குசாமியின் நட்பை பாராட்டி புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

அவர் எழுதியுள்ள அந்த நீண்ட பதிவில் லிங்குசாமி அவர்களை புகழ் மழையால் நனைத்திருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன். பேஸ்புக்கில் வசந்தபாலன் பதிவிட்ட இந்த பதிவை கண்டு திரையுலகமும் ரசிகர்களும் இவர்களது நடிப்பை கண்டு வெகுவாகப் பாராட்டி வருகிறார்கள்.