ஆக்சன் கிங் அர்ஜுன் கதாநாயகனாக நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான ஷங்கர், தொடர்ந்து காதலன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ் என படத்திற்கு  படத்திற்கு படம் தனது உழைப்பையும் பிரம்மாண்டத்தையும் கொட்டி ரசிகர்களின் புருவத்தை உயர வைத்து ரசிக்க வைத்தவர்.

தொடர்ந்து சியான் விக்ரமின் அந்நியன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சிவாஜி எந்திரன், தளபதி விஜய்யின் நண்பன், மீண்டும் சியான் விக்ரமின் , & சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.O என தொடர்ந்து பல பிரமாண்ட வெற்றிப் படங்களை கொடுத்து இந்திய சினிமாவின் நம்பர் 1  கமர்சியல் இயக்குனராக வலம் வருகிறார் இயக்குனர் ஷங்கர்.

அடுத்ததாக உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்-2 திரைப்படத்தை இயக்கி வருகிறார் மேலும் தெலுங்கு சினிமாவின் மெகா பவர் ஸ்டார் ராம்சரண் நடிப்பில் உருவாகும் RC15 படத்தையும்  தமிழில் மெகா ஹிட்டான அந்நியன் படத்தின் ரீமேக்காக பாலிவுட்டில் ரன்வீர் சிங்குடன் இணையும் புதிய படத்தையும் இயக்க உள்ளார்.

இந்நிலையில் தற்போது இயக்குனர் லிங்குசாமியின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார் இயக்குனர் ஷங்கர். தற்போது இயக்குனர் லிங்குசாமி பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்யினேனியுடன் இணைந்து #RAPO19 புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதன் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸாக இயக்குனர் ஷங்கர் வருகை புரிந்து அனைவரோடும் கலந்துரையாடி சென்றிருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.