தமிழ் சினிமாவில் தனது திரைப்பயணத்தை தொடங்கி ஹாலிவுட் படங்களுக்கு இணையாக படங்கள் எடுத்து இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஷங்கர்.கமல்ஹாசன் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தினை இயக்கி வந்தார் ஷங்கர்.இந்த படத்தின் ஷூட்டிங் சில காரணங்களால் தடைபட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ரன்வீர் கபூர் நடிப்பில் அந்நியன் படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்க தயாராகி வருகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.இதனை தவிர ராம்சரண் ஹீரோவாக நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் ஷங்கர்.இவரது மகள் ஐஸ்வர்யாவின் மகள் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

பாண்டிச்சேரி ரஞ்சி கிரிக்கெட் அணியின் கேப்டனும்,மதுரை TNPL அணி கேப்டனுமான ரோஹித் தாமோதரன் என்பவரை ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா கரம்பிடித்துள்ளார்.கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மணமகளின் பெற்றோர் மற்றும் மிக முக்கிய சொந்தங்கள் மட்டுமே திருமணத்தில் கலந்துகொண்டனர்.தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும், சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்களும், நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

கொரோனா பெருந்தொற்று படிப்படியாக குறைந்து அன்றாட வாழ்வு நிலை திரும்பியவுடன் முக்கிய பிரமுகர்கள், திரையுலகத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் அழைத்து சிறப்பான முறையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.புதுமண தம்பதிக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.