தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குனராக திகழ்பவர் செல்வராகவன். இவர் இயக்கிய புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் காலங்கள் கடந்தும் கொண்டாடப்படுகிறது. கடைசியாக சூர்யா நடிப்பில் NGK படத்தை இயக்கினார். தற்போது அடுத்த படுத்தின் ஸ்கிரிப்ட் பணியில் உள்ளார். 

Selvaraghavan

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு நேரத்தில் மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரைப்பிரபலங்கள் தங்களது குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்து வருகின்றனர். 

Selvaraghavan

இந்நிலையில் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவரது இரண்டு குழந்தைகளும் சேர்ந்து, லைட்டில் பூச்சி இருப்பது போல செட் செய்துவிட்டு, செல்வராகவனை அழைக்கின்றனர். அதை பார்த்த செல்வராகவன் நிஜ பூச்சி என பயப்பட, ப்ரான்க் என்று எடுத்துரைத்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.