சமையலில் அசத்தும் இயக்குனர் சீனு ராமசாமி ! வீடியோ இதோ
By Sakthi Priyan | Galatta | April 20, 2020 09:54 AM IST

தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் சீனு ராமசாமி. கூடல் நகர் படத்தின் மூலம் இயக்குனராக கால்பதித்தவர். தென்மேற்கு பருவகாற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே போன்ற சீரான படைப்புகளை அளித்துள்ளார். தற்போது விஜய் சேதுபதி வைத்து மாமனிதன் படத்தை இயக்கியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரைக்கும் இந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, நடனம் பாடல் என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் சமையல் செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அம்மியில் மசாலாக்களை அரைத்து சமையல் செய்கிறார். அந்த வீடியோவில், கொரோனா ஊரடங்கினால் ஒரு ரசவாதம் நிகழ்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
— Seenu Ramasamy (@seenuramasamy) April 19, 2020
Kamal Haasan and Anirudh team up yet again after Indian 2!
20/04/2020 03:46 AM
Priyamani's new movie trailer | Ateet
20/04/2020 03:44 AM
20/04/2020 03:42 AM