பிஜு மேனன் மற்றும் பிரித்திவிராஜ் நடிப்பில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான மலையாள திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். விமர்சன ரீதியாகவும், கமர்ஷியல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்த பிளாக்பஸ்டர் படத்தை தற்போது தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் ரீமேக் செய்ய திட்டமீட்டுள்ளனர். 

Director Sachy Wish To See Karthi Parthiban In AK Tamil Remake Director Sachy Wish To See Karthi Parthiban In AK Tamil Remake

இப்படத்தின் இயக்குனரும் எழுத்தாளருமான சச்சி நேற்றிரவு காலமானார். இச்செய்தி திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியது. ஜூன் 15-ம் தேதி சச்சிக்கு இடுப்பு எழும்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று, வீட்டிற்கு திரும்பி உள்ளார். இந்நிலையில், திடீரென இன்று ஏற்பட்ட மாரடைப்பால் திரிச்சூரில் உள்ள ஜூபிளி மிஸன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இயக்குனர் சச்சி உயிரிழந்தார். 

Director Sachy Wish To See Karthi Parthiban In AK Tamil Remake

இந்நிலையில் அவரை குறித்தும் அவருடைய அய்யப்பனும் கோஷியும் படம் குறித்தும் பிரபல நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அப்பதிவில் அய்யப்பனும் கோஷியும் பிஜு மேனன் பாத்திரம் நான் நடித்தால் நன்றாக இருக்குமென பலரும் சொன்னார்கள். இயக்குனரே சொல்லியிருக்கிறார்-மகிழும் முன்னரே அவருக்கு RIP சொல்லும் நிலை-நிலைகுலைத்தது. இன்று படத்தை பார்க்கிறேன். அவர் விருப்பம் ஈடேற முயன்று பார்க்கிறேன்.மலையாள நண்பர்கள் ஒத்துழைக்கலாம், என்று குறிப்பிட்டுள்ளார். பிரித்விராஜ் நடித்த பாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று இயக்குனர் சச்சி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.