அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா ரஞ்சித்.இதனை தொடர்ந்து மெட்ராஸ்,சூப்பர்ஸ்டாருடன் கபாலி,காலா என்று வெற்றிப்படங்களில் மூலம் ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர் பா இரஞ்சித்.

Director Ranjith Celebrates New Year Differently

தற்போது ஒரு பாலிவுட் படத்தை இயக்கி வருகிறார்.மேலும் தனது நீலம் ப்ரோடுக்ஷன்ஸ் சார்பாக தரமான படங்களாக மக்களுக்கு கொடுத்து வருகிறார்.பொழுதுபோக்கிற்காக சினிமா என்பதைத் தாண்டி, மக்களை சிந்திக்க வைப்பதே சினிமா என்று பயணிப்பவர். சமூக அடுக்குகளையும், முரண்களையும் தன் படைப்புகளின் மைய உரையாடலாக எப்போதும் கையாள்பவர்.

Director Ranjith Celebrates New Year Differently

பபுத்தாண்டை முன்னிட்டு ஓசூர் மற்றும் அதனையொட்டி உள்ள கர்நாடகா பகுதிகளில் இயக்குநர் பா.இரஞ்சித் சுற்றுப் பயணம் மேற்கொண்டு,அங்கு நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைப்பில் உருவாக்கப்பட்டுள்ள அம்பேத்கர் அரசியல் பள்ளி,சட்ட ஆலோசனை மையம்,விளையாட்டு மற்றும் கலைத்திறமைகள் பயிற்சி பள்ளிகள்,அம்பேத்கர் நூலகங்கள்,வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் தொடங்குவோர் ஆலோசனை மையம் போன்றவற்றை தொடங்கி வைத்தார்.

Director Ranjith Celebrates New Year Differently

Director Ranjith Celebrates New Year Differently

Director Ranjith Celebrates New Year Differently

Jaibheem Law Clinic என்பதை முதல்முறையாக திறந்துவைத்தார்.வெவ்வேறு கிராமங்களில் நடந்த விழாக்களில் பங்கேற்ற பா.இரஞ்சித் பேசியதாவது இந்தியாவில் மதத்தாலும், சாதியாலும் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி தீவிரமாகிறது.நமக்கு பாதுகாப்பாக இருக்கக் கூடியது புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டம் தான்.

Director Ranjith Celebrates New Year Differently

Director Ranjith Celebrates New Year Differently

Director Ranjith Celebrates New Year Differently

எனவே தான் இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டும் என்கிற நோக்கத்தில் இதனை செய்துள்ளோம். விரைவில் தமிழகம் முழுவதும் இதுபோல முன்னெடுப்புகளை செய்யவிருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.இந்த விழாக்களில் கர்நாடக   மற்றும் தமிழக அரசியல் ஆளுமைகள் மற்றும் ஆயிரக்கணக்கான இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

Director Ranjith Celebrates New Year Differently

Director Ranjith Celebrates New Year Differently

Director Ranjith Celebrates New Year Differently

Director Ranjith Celebrates New Year Differently