தமிழ் சினிமாவிற்கு முண்டாசுப்பட்டி,ராட்சசன் போன்ற சிறந்த படைப்புகளை தந்தவர் இயக்குனர் ராம்குமார். சமீபத்தில் வெளியாகிய இவரது ராட்சசன் படம் சிறப்பான வரவேற்பை பெற்றது. 

விஷ்ணுவிஷால், அமலாபால் போன்ற நடிகர்கள் இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தனர். ஜிப்ரான் இசையில் படத்தின் ஒவ்வொரு காட்சியும் சினிமா விரும்பிகளை மிகவும் ஈர்த்த வண்ணமுள்ளது. திரை பிரபலங்களின் மத்தியிலும் அதிகமான பாராட்டுகளை பெற்று வருகிறது இப்படம்.

தற்போது IMDB வெளியிட்ட சிறந்த 10 படத்துக்கான பட்டியலில் ராட்சசன் படம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. 2018-ம் ஆண்டின் சிறந்த படங்கள் பட்டியலில் இடம்பெற்ற படக்குழுவினரை பாராட்டுவதில் பெருமை கொள்கிறது கலாட்டா.