குக்கூ, ஜோக்கர் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் ராஜு முருகன். 64-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது இவர் உருவாக்கிய ஜோக்கர் திரைப்படம். இயக்கம் அல்லாது சீரான எழுத்தாளரும் கூட. தோழா, மெஹந்தி சர்க்கஸ் போன்ற படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார். 

rajumurugan

கடந்த 2016-ம் ஆண்டு VJ ஹேமா சின்ஹாவை திருமணம் செய்தார். தற்போது இந்த அழகான ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. தாய் மற்றும் குழந்தை இருவரும் ஆரோக்கியமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. 

RajumuruganAndNeha

இவரது இயக்கத்தில் சமீபத்தில் ஜிப்ஸி திரைப்படம் வெளியானது. ஜீவா கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் நடாஷா சிங் ஹீரோயினாக நடித்தார். இவர்களுடன், நடனமாடும் குதிரை ஒன்றும் முக்கியக் பாத்திரத்தில் நடித்திருந்தது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.