பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் இயக்குனர் SS ராஜமவுலி தற்போது RRR படத்தை இயக்கி வருகிறார். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் போய்க்கொண்டிருக்கிறது. மிகுந்த பொருட்செல்வத்தில் உருவாகும் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உருவாக்கியுள்ளது. கொரோனா ஊரடங்கு வீட்டில் இருக்கும் அவரை தொலைக்காட்சி நிறுவனங்கள் பலவும் தங்களுக்கு பேட்டி அளிக்கும்படி அழைப்பு விடுத்தனர். இதனையடுத்து ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், ரசிகர்கள் முன்பு தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். 

Rajamouli

RRR படத்தின் வேலைகள் முடிந்த பின்பு, தான் முன்பு சொல்லியிருந்தபடியே பழம்பெரும் தயாரிப்பாளர் KL நாராயனனின் துர்கா ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கு அடுத்த படத்தை இயக்க இருப்பதாகவும் அதில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிப்பார் என்றும் அதிரடியாக கூறியுள்ளார். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் திரை விரும்பிகள். 

Maheshbabu

1920-களில் இருந்த 2 சுதந்திர போராட்ட தியாகிகளின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்த RRR படம் உருவாகிறது. ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிக்கின்றனர். மேலும் ஆலியா பட் மற்றும் அஜய்தேவ்கன் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.