இரும்புத்திரை படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் பி.எஸ்.மித்ரன். இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்திகேயனை வைத்து ஹீரோ படத்தை இயக்கினார். கடந்த ஆண்டு வெளியான இப்படம் சூப்பர் ஹீரோ ஜானரில் அமைந்தது. 

psmithran

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடையும் இந்த சூழலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியே வருகின்றனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரை பிரபலங்களும் தங்களால் முடிந்த விழிப்புணர்வு பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர். 

PSMithran

இந்நிலையில் இயக்குனர் மித்ரன், கொரோனா வைரஸ் பரவி வரும் இந்நேரத்தில் Sanitizer-ஐ அதிக விலைக்கு விற்பனை செய்தவர்களை பார்தெல்லாம் கோவப்பட்டோமே, இன்று காலை ஒரு நியூஸ் சேனல் இதே #COVID19-ஐ ஒரு மதத்திற்கு எதிரான பிரச்சாரமா மாத்திகிட்டு இருக்கான், இவனுங்கலாம் என்ன டிசைன்னு புரியவில்லை என்று பதிவு செய்துள்ளார்.