தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் பேரரசு. கடந்த 2005-ஆம் ஆண்டு விஜய் வைத்து திருப்பாச்சி படத்தை இயக்கி வெற்றி கண்டார். இதையடுத்து இதே கூட்டணியில் சிவகாசி திரைப்படம் வெளியானது. இத்திரைப்படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன் பின் திருப்பதி, பழனி, திருத்தனி, தர்மபுரி உள்ளிட்ட பல படங்களை பேரரசு இயக்கினார். ஊர்களின் பெயரை தலைப்பாக வைத்து படம் இயக்குவது இவரது குணாதிசயமாகிவிட்டது. 

perarasu

இந்நிலையில் இயக்குனர் பேரரசு திருப்பாச்சி படம் குறித்து ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். அப்பதிவில், நேற்று சன் டிவி தொலைக்காட்சியில் திருப்பாச்சி திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. நேற்றுதான் படம் ரிலீஸ் ஆனதுபோல் நிறைய பேர் இன்று தொலைபேசியில் பாராட்டினார்கள். பாராட்டிய அனைவருக்கும் நன்றி. 

Director Perarsu

பதினைந்து வருடங்களுக்கு பிறகும் இத்திரைப்படத்தை மக்கள் கொண்டாடுவதில் ஆச்சர்யம் இல்லை. மீண்டும் தளபதி விஜய்யோடு இயக்குனர் பேரரசு இணைய வேண்டும் என்பதே தளபதி ரசிகர்களின் கோரிக்கை.