சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் மிஷ்கின். இதையடுத்து இயக்குனர் மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றார்.தொடர்ந்து நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு மற்றும் துப்பறிவாளன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
 
மேலும் நடிகராகவும் நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சூப்பர் டீலக்ஸ், சவரக்கத்தி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தனக்கே உரித்தான பாணியில் திரைப்படங்களை கொடுத்துவரும் இயக்குனர் மிஷ்கினுக்கு என தமிழ் திரையுலகில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது என சொல்லலாம்.

கடைசியாக இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்த சைக்கோ திரைப்படம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அடுத்ததாக நடிகைஆன்ட்ரியா நடிக்கும் பிசாசு2 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
 
இந்நிலையில் நேற்று ட்விட்டர் ஸ்பெஸில் கலந்து கொண்ட இயக்குனர் மிஷ்கின் தளபதி விஜய் உடன் பணியாற்றினால் எந்த மாதிரியான திரைப்படம் ஆக இருக்கும் என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகராக திகழும் தளபதி விஜய்யை ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் போன்ற ஒரு திரைப்படத்தில் இயக்க வேண்டும் என இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். 

முன்னதாக இயக்குனர் செல்வராகவனும் நடிகர் விஜய்யை வைத்து BOURNE திரைப்படங்கள் போன்று ஸ்பை த்ரில்லர் திரைப்படங்களில் இயக்க வேண்டும் என தெரிவித்திருந்த நிலையில் தற்போது இயக்குனர் மிஷ்கின் தளபதி விஜய்யை வைத்து ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்கள் போல ஒரு திரைப்படத்தை இயக்க விருப்பம்புவதாக தெரிவித்துள்ளது சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.