தமிழில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சரத்குமார் மற்றும் ஜோதிகா இணைந்து நடித்து வெளிவந்த பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில்  ஆயிரத்தில் ஒருவன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். 

குறிப்பாக உலக நாயகன் கமல்ஹாசன் இயக்கத்தில் வெளிவந்த விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, உத்தமவில்லன், இயக்குனர் ராமின் இயக்கத்தில் வெளிவந்த தரமணி,இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில்  வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். மேலும் பாடகியாகவும் பல பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அடுத்ததாக தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். முன்னதாக வெளிவந்த பிசாசு திரைப்படம் பெற்ற வெற்றியை தொடர்ந்து தற்போது பிசாசு 2 திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கும் நிலையில், சமீபத்தில் பிசாசு2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. 

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஆண்ட்ரியாவின் தோற்றமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிக்கும் பிசாசு 2 படத்திற்கு இசை அமைப்பாளர் கார்த்திக் ராஜா இசை அமைக்க ROCK FORT என்டர்டெயின்மென்ட் சார்பில் திரு.T.முருகானந்தம் அவர்கள் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் பிசாசு 2 திரைப்படத்தை குறித்து நேற்று ட்விட்டர் ஸ்பேஸில் பேசிய இயக்குனர் மிஷ்கின் பிசாசு2 திரைப்படத்திற்காக நடிகை ஆண்ட்ரியாவுக்கு தேசிய விருது கிடைக்கும்  என தெரிவித்துள்ளார். நடிகை ஆண்ட்ரியாவை பாராட்டி இயக்குனர் மிஷ்கின் ட்விட்டர் ஸ்பேஸில் பேசியுள்ள இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.