இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் தற்போது தயாராகி வரும் திரைப்படம் பிசாசு 2. முன்னதாக இயக்குனர் பாலாவின் தயாரிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த பிசாசு  திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த நல்ல வரவேற்பை அடுத்து தற்போது பிசாசு 2  திரைப்படம் தயாராகி வருகிறது. 

பிசாசு 2 திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா கதாநாயகியாக நடித்து வருகிறார்.மேலும் சமீபத்தில் வெளியான் டிரிபல்ஸ் மற்றும் நவம்பர் ஸ்டோரி உள்ளிட்ட வெப்சீரிஸ்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த நடிகை நமீதா கிருஷ்ணமூர்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் T.முருகானந்தம் பிசாசு 2 திரைப்படத்தை தயாரித்து வருகிறார். பிசாசு 2 படத்திற்காக முதல்முறை இயக்குனர் மிஷ்கினுடன் இணைந்து பணியாற்றுகிறார் இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா. 

ஒளிப்பதிவாளர் சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவில் ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக தயாராகிவரும் பிசாசு 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று பிசாசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் வெற்றிமாறன் பிசாசு 2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பிசாசு 2 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.