ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தனி ஒருவன். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு நல்ல விமர்சனமும் பெற்றது. தொடர்ந்து இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருந்தார். ஜெயம் ரவியின் ரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் என்றே கூறலாம். இயக்குனர் மோகன் ராஜாவுக்கும் பல பாராட்டுகளை பெற்றுத்தந்தது. 

சில நாட்கள் முன்பு இயக்குனர் மோகன் ராஜா, தனி ஒருவன் படத்தின் அடுத்த பகுதியை உருவாக்க நானும் என் உதவி இயக்குனர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் முழு முயற்சியில் இறங்கி உள்ளோம். விரைவில் கதை ரெடியாகும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், தனி ஒருவன் ரிலீஸாகி இன்றுடன் ஐந்து ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு செய்திருந்தார். படத்தில் நடித்த ஹரீஷ் உத்தமன் இரண்டாம் பாகம் பற்றி என்று கூறியதற்கு, விரைவில் அப்டேட் வரும் என்று ருசிகர செய்தியை பதிவு செய்துள்ளார். 

ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’, லக்‌ஷ்மண் இயக்கும் பூமி மற்றும் ஜனகனமன ஆகிய 3 படங்களில் நடித்து வருகிறார். இதில் பூமி திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும், லாக்டவுன் முடிவுக்கு வந்து திரையரங்குகள் திறந்தவுடன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்றுமுன் பூமி படத்தின் புதிய ஸ்டில்களை வெளியிட்டுள்ள படக்குழுவினர் இன்னும் 13 நாட்களில் இந்த படம் குறித்த ஒரு நல்ல செய்தியை கூறவுள்ளதாக தெரிவித்துள்ளனர். பூமி படமும் ஓடிடியில் ரிலீசா அல்லது வேறு ஏதேனும் நல்ல செய்தியா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் இன்னும் 13 நாட்களில் அதாவது செப்டம்பர் 10ஆம் தேதி ஜெயம் ரவியின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது

ஜெயம் ரவி ஜோடியாக நிதிஅகர்வால் நடித்துள்ள இந்த படத்தில் ரோனிட் ராய், சதீஷ், ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா உருவாகியுள்ள இந்த படத்தை லக்‌ஷ்மண் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ’ரோமியோ ஜூலியட்’ மற்றும் ’போகன்’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட்டு படமாகிறது இதை மணிரத்னம் இயக்குகிறார். கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிக்க உள்ளனர் என்ற தகவல் தெரியவந்தது. இவர்களுடன் ஜெயராம் , லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில்  நடிக்கவுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். 

தாய்லாந்தில் உள்ள வனப்பகுதிகளில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இதைத்தொடர்ந்து சென்னை பாண்டிச்சேரியில் நடந்த படப்பிடிப்பிற்கு பிறகு ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டிக்கு விரைந்தனர்.கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுனுக்கு முன்னரே இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. கொரோனா காலகட்டத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் நடத்துவது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என மணிரத்னம் ஒரு பேட்டியில் முன்பு கூறி இருந்தார்.