தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராகவும் திகழும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் விக்ரம்.  முன்னதாக தளபதி விஜய்யுடன் இணைந்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் திரைப்படம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முடங்கிக்கிடந்த திரையரங்குகளை திருவிழாவாக மாற்றி ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் விக்ரம் படத்தில் பகத் பாசில் விஜய்சேதுபதி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, நரேன், ஆண்டனி வர்கீஸ், ரமேஷ் திலக், காளிதாஸ் ஜெயராம், செம்பன் வினோத் ஜோஸ், மேகா ஆகாஷ், ஆடுகளம் முருகதாஸ், ஷிவாணி நாராயணன் உள்ளிட்ட பலர் விக்ரம் திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி இருக்கும் விக்ரம் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். வருகிற ஜூன் 3-ம் தேதி விக்ரம் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் டீசர்,ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக தனது முதல் படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாநாடு திரைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், 2-து படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வெளிவந்த கைதி திரைப்படம் இவரை குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக மாற்றியது. சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கைதி படத்தை தொடர்ந்து கைதி 2 திரைப்படத்திற்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் குதிரைவால் படத்தின் சிறப்பு காட்சிக்குப் பிறகு நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கைதி 2 திரைப்படம் எப்போது? டில்லி மீண்டும் எப்போது பக்கெட்டில் பிரியாணி எடுத்துக்கொண்டு லாரியில் வருவார்? எனக் கேட்ட கேள்விக்கு "கூடிய சீக்கிரம் வருவார்" என பதிலளித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது மேலும் தளபதி67 மற்றும் விக்ரம் திரைப்படங்கள் குறித்த ருசிகர தகவல்களை லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துகொண்டார். வைரலாகும் அந்த வீடியோ இதோ…