தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழும் இயக்குனர் N.லிங்குசாமி, தமிழில் ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் தொடர்ந்து நடிகர் மாதவன், மீரா ஜாஸ்மின் இணைந்து நடித்து வெளிவந்த அதிரடித் திரைப்படமான ரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளர்ந்தார்.

தொடர்ந்து நடிகர் விஷாலுடன் இணைந்து N.லிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. அடுத்ததாக பீமா, பையா வேட்டை, அஞ்சான் என தொடர்ந்து அதிரடி திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குனர் லிங்குசாமி கடைசியாக மீண்டும் விஷாலுடன் இணைந்து சண்டக்கோழி 2 படத்தை இயக்கியிருந்தார் கலவையான விமர்சனங்களை சந்தித்த சண்டகோழி 2 திரைப்படத்திற்கு பின் இரண்டு வருட பிறகு தற்போது இயக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி இளம் கதாநாயகர்களில் ஒருவரான ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் #RAPO19 இந்த புதிய திரைப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் தயாரிக்கிறது. உப்பென்னா படத்தின் கதாநாயகி கீர்த்தி ஷெட்டி படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். ராக் ஸ்டார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான த்ரிஷ்யம் படத்தின் ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். 

கபாலி, கைதி, கேஜிஎஃப் படங்களின் ஸ்டன்ட் இயக்குனர்களான அன்பு-அறிவு சகோதரர்கள் #RAPO19 படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர்.இயக்குனர் லிங்குசாமி எழுதி இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.